தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு - ஓ.பி.எஸ்

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

eps
eps

By

Published : Feb 19, 2020, 5:53 PM IST

சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி, ” விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் விவசாயிகள் தவித்துவருவதாகவும், யாரிடம் சென்று கேட்பது என்று தெரியாத சூழல் உள்ளதாகவும் பேசினார்.

அதற்கு பதிலளித்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, அதிமுக ஆட்சியில் இதுவரை 7 ஆயிரத்து 618 கோடி ரூபாய் பயிர் காப்பீட்டுத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 1% மட்டுமே பாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பயிர் காப்பீடு கிடைக்காத விவசாயிகள் குறித்து ஆய்வு செய்து , விடுபட்ட அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

பிறகு பேசிய ராமசாமி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும் எனவும், போதிய நிதி இல்லாத சூழல் உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வாரியாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்த கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தற்போதுதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் துறை வாரியான மானியக்கோரிக்கையின் போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி முழுமையாக விடுவிக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: 'விவசாயிகள் சோலார் மின் உற்பத்தி செய்ய அரசு ஊக்குவிக்கும்' - அமைச்சர் தங்கமணி

ABOUT THE AUTHOR

...view details