கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 12 நாட்கள் தளா்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து வெளிமாநிலங்கள்,வெளிமாவட்டங்களுக்கு 33 விமானங்களும்,அதைப்போல் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 33 விமானங்களுமாக மொத்தம் 66 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால், பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது. சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களில் சுமாா் 2,800 பேரும், சென்னைக்கு வரும் விமானங்களில் சுமாா் 1,500 பேரும், மொத்தம் 66 விமானங்களில் 4,300 போ் மட்டுமே பயணிக்க முன்பதிவு செய்துள்ளனா்.
சென்னையில் முழு ஊரடங்கு - விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவு! - Full Curfew in Chennai
சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், விமானநிலையத்தில் உள்நாட்டுப் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது.
குறிப்பாக, கவுகாத்தியிலிருந்து சென்னை வருவதற்கு 4 பேரும், சேலம்,மைசூரு, ராஜமுந்திரி விமானங்களில் தலா 6 பேரும், மதுரை விமானத்தில் 11, பெங்களூரு விமானத்தில் 12, தூத்துக்குடி விமானத்தில் 13, கொல்கத்தா விமானத்தில் 14, திருச்சி விமானத்தில் 19, திருவனந்தபுரம் விமானத்தில் 23 போ் மட்டுமே பயணிக்க முன்பதிவு செய்துள்ளனா்.
முழு ஊரடங்கிற்கு முன்னதாக கடந்த 17ஆம் தேதி சென்னையில் இயக்கப்பட்ட 64 உள்நாட்டு விமானங்களில் மொத்தம் சுமாா் 6,450 போ் பயணித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.