சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் வெறிநோய் விழிப்புணர்வு குறித்து பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷயைன் , கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சி.பாலசந்திரன் சிறப்புரையாற்றினார். அதன்பின் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பாக வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு குறித்த மாராத்தான் தொடர் ஓட்டம் பெசன்ட் நகர் எல்லியட்ஸ் கடற்கரை சாலையில் 28ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் - MGR Medical University
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் செப். 29ஆம் தேதி வெறி நோய் தடுப்பூசி முகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
அதேபோல சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் 29ஆம் தேதி செல்லப் பிராணிகளுக்கு இலவச வெறிநோய்த் தடுப்பூசி அளிக்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து நீதியரசர் அனிதா சுமிந்த் வெறிநோய் குறித்த விழிப்புணர்வு மலரை வெளியிடுகின்றார்.
இதையும் படிங்க: ரத்தம் தெறிக்கும் ஃப்ரீ பயர் விளையாட்டு, வன்முறையை துண்டும் - நீதிமன்றம் கவலை