இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "சென்னை கிண்டியில் இயங்கி வரும் மாநிலத் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், இதுவரை போட்டித் தேர்வுகளுக்கான நேரடி இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
அதில் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission - Combined Graduate Level) மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS PO) நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை, ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.