மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணத் திட்டம் - மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய திட்டம் அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திருக்கோயில்கள், திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணத் திட்டம்
சென்னை: திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
திருக்கோயில்களில் திருமணம் செய்திட கட்டணமில்லா திருமணத் திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 8 அன்று தொடங்கிவைத்து மணமக்களுக்கு திருமண வாழ்த்துகளுடன் பரிசுப் பொருள்களை வழங்கிச் சிறப்பித்தார்.
இத்திட்டத்தைத் தொடங்கிவைத்ததன் மூலம் இனிவரும் காலங்களில் திருமணம் நடத்தவிருக்கும் மாற்றுத்திறனாளிக்குத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் திருக்கோயில்கள், திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடைபெறும் வகையில் வழிவகைசெய்யப்பட்டுள்ளது.