தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இலவச வேட்டி, சேலை முறைகேடு - விசாரிக்க உத்தரவு - முறைகேடு

சென்னை: இலவச வேட்டி, சேலை திட்டத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக கைத்தறித் துறை அலுவலர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

orders
orders

By

Published : Jan 2, 2020, 1:43 PM IST

பொங்கல் பண்டிகையையொட்டி, ஏழை எளிய மக்களுக்கு 1 கோடியே 25 லட்சம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்வதற்கான நூல்களை, தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை கொள்முதல் செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளது.

இதில் ஒரு சேலைக்கு, 260 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், தரம் குறைந்த நூல்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்ததன் மூலம் 21 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 250 ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளதாகக் கூறி, திருப்பூரைச் சேர்ந்த முத்தூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் கோவிந்தராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், தரம் குறைந்த நூல்களை நெய்வதற்கு வழங்கியதால், ஒரு நாளுக்கு 6 சேலைகள் நெய்யப்படும் நிலையில் 3 சேலைகளை மட்டுமே நெய்வதால் தங்கள் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறியுள்ளார்.

தரம் குறைந்த நூல்களை, அதிக விலைக்குக் கொள்முதல் செய்ததன் மூலம், அரசுக்கு 21.31 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் கொடுத்த மனு மீது லஞ்ச ஒழிப்புத் துறை மூன்று மாதத்திற்குள் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை. தற்காலிக ஆசிரியர்கள் நியமன அறிப்பாணைக்குத் தடை!

ABOUT THE AUTHOR

...view details