தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாற்றுத்திறனாளிகளின் துணையாளருக்கும் பேருந்தில் இலவசப் பயண வசதி

பெண்களுக்கான இலவசப் பேருந்து வசதிகள் திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளின் துணையாளர் ஆகியோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பேருந்தில் இலவச பயண வசதி
பேருந்தில் இலவச பயண வசதி

By

Published : Sep 9, 2021, 6:54 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது வெளியிடப்பட்ட அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில்,

"அனைத்து பெண் பயணிகளும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இத்திட்டத்தின்படி தமிழ்நாடு முழுவதும் ஏழாயிரத்து 312 சாதாரண நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடந்த ஜூலை 12ஆம் தேதி முதல் கணக்கெடுப்பு நோக்கங்களுக்காக பூஜ்ஜிய சீட்டுகளை பெண் பயணிகளுக்கு வழங்குகின்றன.

34 லட்சம் பெண்கள் பயணம்

இதனடிப்படையில், நாளொன்றுக்கு சுமார் 34 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். இது சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மொத்த பயணிகளில் சுமார் 60.70 விழுக்காடாகும்.

இந்த இலவச பயண வசதி திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளின் துணையாளர் ஆகியோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ”இலவச பேருந்து: 34 லட்சம் பேர் பயணம்”

ABOUT THE AUTHOR

...view details