தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி: 6 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் கைது

போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த வழக்கில் ஆறு ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த கேரளாவைச் சோ்ந்தவர் மலேசியாவிலிருந்து விமானத்தில் சென்னை வந்தபோது கைதுசெய்யப்பட்டார்.

போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி
போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி

By

Published : Sep 7, 2021, 10:48 AM IST

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சோ்ந்தவர் சிகாபுதீன் (37). இவர் மீது 2015ஆம் ஆண்டு மலப்புரம் காவல் நிலையத்தில், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்வது உள்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் சகாபுதீனை கைதுசெய்ய தேடினர்.

ஆனால் அவா் காவல் துறையிடம் சிக்காமல் தலைமறைவாகிவிட்டார். அத்தோடு அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டாா் என்றும் தெரியவந்தது. இதையடுத்து மலப்புரம் காவல் துணை ஆணையர், சகாபுதீனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார்.

அத்தோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து எல்.ஓ.சி. (LOC) போட்டுவைத்திருந்தார்.

சென்னை விமான நிலையம்

இந்நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு, நுழைவு இசைவு உள்ளிட்ட ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர்கள் கணினியில் பரிசோதித்தனர்.

அந்த விமானத்தில் ஆறு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த கேரளாவைச் சேர்ந்த சகாபுதீனும் வந்தார். அவருடைய கடவுச்சீட்டை கணினியில் ஆய்வுசெய்தபோது, கேரள காவல் துறையால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.

இதையடுத்து குடியுரிமை அலுவலர்கள் சகாபுதீனை வெளியே போகவிடாமல் சுற்றிவளைத்துப் பிடித்து கைதுசெய்து அங்குள்ள ஒரு அறையில் அடைத்துவைத்தனர். அத்தோடு இது குறித்து மலப்புரம் காவல் துணை ஆணையருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையம்

இதையடுத்து மலப்புரம் தனிப்படை காவல் துறையினர் சகாபுதீனை அழைத்துச் செல்ல கேரளாவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க:23.ம் புலிகேசியும், திமுக எம்எல்ஏக்களும்

ABOUT THE AUTHOR

...view details