தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படைகள் - ex minister rajendra balaji case

மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

former minister rajendra balaji
former minister rajendra balaji

By

Published : Dec 17, 2021, 7:39 PM IST

சென்னை:ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வரை பெற்று ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இதனிடையே ராஜேந்திர பாலாஜி முன்பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் முன்பிணை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. அத்துடன் அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ராஜேந்திர பாலாஜியின் முன்பிணை மனு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details