சென்னை அடுத்த ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன்(30). இவரது உறவினர் ஒருவரை, நான்கு பேர் கொண்ட கும்பல் கிண்டல் செய்துள்ளது. இதனை நிரஞ்சன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும், நிரஞ்சனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
'கொலை வழக்கில்' 4 பேருக்கு ஆயுள்: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: அம்பத்தூரில் உறவினரை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவரை கொலை செய்த வழக்கில், நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 6.8.2013 அன்று நிரஞ்சன் வீட்டிற்கு சென்ற நான்கு பேரும், நிரஞ்சனை அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அம்பத்தூரைச் சேர்ந்த வினோபா(24), ராஜரத்தினம்(24), ராஜேஷ்(29), பார்கவ்(23) ஆகிய நான்கு பேரை கைது சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி அம்பிகா தீர்ப்பு வழங்கினார். இதில், நான்கு பேர் மீதும் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.