தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: மேலும் 4 பேர் கைது - அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுத்தின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட மேலும் 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் 4 பேர் கைது
மேலும் 4 பேர் கைது

By

Published : Apr 29, 2022, 10:27 AM IST

சென்னை:சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தென் மண்டல அலுவலர் சுந்தரேசன் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி நடந்துள்ளது. சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் இந்த குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 8 பேரை கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த குற்றச் சம்பவத்திற்கு காரணமான திபாகரன், சத்யநாராயணன், மணிகண்டன், பாலகிருஷ்ணன் ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நான்கு பேர் மீதும் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. மேலும் திபாகரன் என்பவர் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று பலரிடம் அடையாளப்படுத்திக் கொண்டு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:அதிகாரிகளுக்கு கொடுக்க லஞ்சம் வாங்குகிறேன்!- ஊராட்சி செயலரின் பரபரப்பு ஆடியோ!

ABOUT THE AUTHOR

...view details