சென்னை: போரூர்-ஆற்காடு சாலை, சப்தகிரி நகரிலுள்ள சரவண பவன் ஹோட்டலில் திடீரென ஏற்பட்ட ஏசி கியாஸ் வெடிப்பால் 3 பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சரவண பவனில், ஏசி மெக்கானிக் மணிகண்டன், கிரிஷ் குமார், பாலமுருகன், ஆனந்த முருகன் உள்ளிட்ட பலர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் நேற்று (செப்.27) சரவண பவனில் உள்ள ஏசி கியாஸைப் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென பலத்த சத்தத்துடன் ஏசியிலிருந்த கியாஸ் வெடித்து சிதறியது.