தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொடங்கியது நான்கு தொகுதி இடைத்தேர்தல் - aravakurichi

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மக்களவைத் தேர்தலின் 13 வாக்குச்சாவடிகளின் மறுவாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

poll

By

Published : May 19, 2019, 7:59 AM IST

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்தலுக்கான பரப்புரையில் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது.

இந்நிலையில், இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்துவருகின்றனர். இந்த நான்கு தொகுதிகளிலும் மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதேபோன்று மக்களவைத் தேர்தலின்போது சில வாக்குச் சாவடிகளில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தருமபுரியில் 8, தேனியில் 2, திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய மக்களவைத் தொகுதிகளில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அதற்கான வாக்குப்பதிவும் இன்று காலை தொடங்கியது.

இந்தத் தேர்தல் பாதுகாப்பாக நடைபெறுவதற்ககு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details