சென்னை:இது குறித்து இ. பாலகுருசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் சுமார் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பெரும்பாலான கல்லூரிகள் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன.
இந்தக் கல்லூரிகளின் தரம் மிகவும் நல்லது முதல் மிக மோசமானது வரை மாறுபடும். தரவுகளின்படி,
- மிகவும் நல்லது 10%
- நல்லது 20%
- சராசரி 40%
- மோசமானவை 20%
- மிகவும் மோசமானவை 10% என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சுமார் 40 விழுக்காடு கல்லூரிகள் சேர்க்கைக்கு பரிசீலிக்கத் தகுதியற்றவை என்பது தெளிவாகிறது.
இந்த மாதிரியான சூழ்நிலையைப் பொறுத்தவரை சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது கடினமான பணியாக இருக்கக்கூடும்.
கல்லூரி அனுபவங்களால் வெற்றி
மேலும், இது பொறியியல் படிப்பில் சேரவிருக்கும் மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் குழப்பமடையச் செய்யலாம். மாணவர்களின் கல்லூரிக்கல்வி என்பது தங்களது வாழ்நாளில் அவர்கள் செய்யும் மிக முக்கியமான முதலீடுகளில் ஒன்றாகும்.
மேலும் மாணவர்கள் தங்களது பிரதான நேரத்தின் நான்கு ஆண்டுகளை கல்லூரியில் செலவிடுவார்கள். எனவே கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களும், வாய்ப்புகளும் வாழ்க்கையில் உங்கள் வெற்றிக்கு முக்கியமானவை.
மாணவர்கள் தங்களை முதலில் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். உங்கள் பலங்கள், பலவீனங்கள், ஆர்வம், திறனைப் பகுப்பாய்வு செய்யுங்கள். தங்களது ஆர்வம், திறனைப் பொறுத்து கலை, அறிவியல் அல்லது வர்த்தகப் படிப்புகளில் தாங்கள் சேரலாம்.
படிப்பின் தேர்வு
உண்மையில் கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்குப் பொறியியல் பட்டதாரிகளைவிட சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ளன. முதலில் பாடநெறியைத் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் பொறியியல் படிக்க முடிவுசெய்திருந்தால், முதலில் உங்கள் ஆர்வத்தையும், தகுதியையும் பொறுத்து படிப்பைத் தேர்வுசெய்ய வேண்டும்.
பெற்றோர் கொடுக்கும் அழுத்தங்களுக்கும் அல்லது பாடத்தின் தற்போதைய பாடப்பிரிவுகளுக்கும் அடிபணிய வேண்டாம். ஏனெனில் நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே உங்களால் முடிந்ததைச் செய்ய முடியும்" எனக் கூறினார் தெளிவாக.
இதையும் படிங்க: 'தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% முன்னுரிமை வழங்குக'