தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ் பொது மொழியாக வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்

சென்னை: இந்தியா முழுவதிலும் தமிழ் மொழி பொது மொழியாக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

ponnar

By

Published : Sep 20, 2019, 5:17 PM IST

Updated : Sep 20, 2019, 6:56 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை கோடம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“பிரதமர் மோடியின் 69ஆவது பிறந்தநாள் நேற்று முன்தினத்திலிருந்து தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்கின்ற வகையில் பாஜக தொண்டர்கள் பணி செய்துவருகின்றனர்.

நம் நாட்டினுடைய தேச பிதா என்றழைக்கப்படும் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக அக்டோபர் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தினசரி 10 கி.மீ என்கிற விதத்தில் நடைப்பயணம் நடத்தப்படும்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி குறித்து பேசிய பேச்சை தவறாக சித்தரித்து அரசியல் ஆதாயம் தேடக்கூடிய முயற்சிகள் நடைபெற்றன. அதனை அவர் தெளிவாக விளக்கியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். முதலில் புரியாமல் திட்டமிட்ட அவர்கள் தற்போது புரிந்த பின் கைவிட்டுள்ளனர்.

இந்தியை யாரும் திணிக்கக் கூடாது என்று ப. சிதம்பரம் ட்வீட் செய்திருப்பது மிகச் சரியான ஒன்று. இந்தியை எந்தக் காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் திணிப்பதற்கு அனுமதி கிடையாது. இதை சொல்லக்கூடிய தகுதி நிச்சயமாக ப.சிதம்பரத்திற்கு உள்ளது. ஏனென்றால் முந்தைய ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் இந்தியை கொண்டுவர வேண்டும் என்று சொல்லி தோற்று போனவர்தான் ப. சிதம்பரம்.

செய்தியாளர்களைச் சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன்

முயற்சி செய்து தோல்வியுற்ற அவர் இந்த கருத்தை சொல்வதில் நியாயம் உள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அரசு எந்த காரணம் கொண்டும் நாட்டு மக்கள் மீது எதையும் திணிக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளது. எனவே இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

நடிகர்களும் நாட்டின் குடிமக்கள்தான். அவர்கள் சொல்லும் சில கருத்துக்களை பெரிதாக எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு அரசியல் கட்சியே சில விஷயங்களை புரிந்துகொள்ளாமல் தவறான முடிவுகளை எடுத்து பிறகு திருத்திக்கொள்கிறார்கள். அந்த வகையில் நடிகர் சொல்லும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன்.

பேனர் கலாசாரத்தால் ஒரு விலை மதிப்பில்லாத உயிரை இழந்துவிட்டோம். இனியாவாது திருந்துவோம். எந்த காரணத்துக்காக இருந்தாலும் சரி பேனர், கட் அவுட் வைக்க அனுமதிக்கக்கூடாது. கோயில் நிகழ்ச்சி, மசூதி, தேவாலயம் என எந்த நிகழ்ச்சிக்கும் பேனர் வைக்கக்கூடாது.

தமிழ்நாட்டிலுள்ள மத்திய, மாநில அரசுகள், தனியார் என அனைத்து இடங்களிலும் பிறருக்கு வேலை அளிக்கும் வாய்ப்பை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு டாஸ்மாக்கில் முடங்கிக் கிடக்கும் தமிழர்களுக்கு அளிக்க வேண்டும். தமிழன் என்ற முறையில் தமிழ் மொழி நாடு முழுவதும் பொது மொழியாக வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. அதற்கு தகுந்தார் போல் வேலை செய்ய வேண்டும்' என்றார்.

Last Updated : Sep 20, 2019, 6:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details