சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சரும் அமமுக துணைப் பொதுச் செயலாளருமான பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் திமுகவில் இணைந்தார். அவருடன் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர்கள், முன்னாள் செயலாளர்கள் என பலர் திமுகவில் இணைந்தனர்.
முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார் - அமமுக துணைப் பொதுச் செயலாளருமான பழனியப்பன்
![முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார் cm mk stalin and Former minister Palaniappan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12345765-thumbnail-3x2-l.jpg)
18:27 July 03
முன்னாள் அமைச்சரும் அமமுக துணைப் பொதுச் செயலாளருமான பழனியப்பன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை மொரப்பூர் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தார். 2011ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இவரை உயர்கல்வித்துறை அமைச்சராக்கினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் அணியில் இணைந்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களில் இவரும் ஒருவர். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அவர் திமுகவில் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் இணைந்தால் வரவேற்போம் - எம்.பி. செந்தில்குமார்!