தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுகவில் சசிகலாவை சேர்க்க மாட்டோம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் - அதிமுக

அதிமுகவுக்கும், சசிகலாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை, அவரை கட்சியில் சேர்க்கமாட்டோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : Oct 28, 2021, 3:56 PM IST

சென்னை: ராயபுரத்தில் அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,

"அரசியல்வாதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். புகழேந்தியின் கருத்துக்கு பதில் கூற வேண்டிய தேவையில்லை. ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு என வீரவசனம் பேசுவதை திமுக செயல்படுத்தி வருகிறது.

சசிகலாவை சேர்க்க மாட்டோம்

அரசியலமைப்பு முறையை அவமதிக்கும் செயலை திமுக செய்து வருகிறது. ஆளுநரின் கருத்துக்கு திமுக, செய்தி தொடர்பாளர் இளங்கோவனை வைத்து பதில் கூறிவிட்டு தோழமை கட்சிகளான காங்கிரஸ் போன்ற கட்சிகளை வைத்து ஆளுநரை விமர்சித்து வருகிறது. திமுகவின் இந்த செயலை பச்சோந்தி தனமாகவே பார்க்கிறோம்.

நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்ற கட்சி திமுக. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தனியாக துறை உருவாக்கப்படும் என மக்களை ஏமாற்றும் அரசாகவே திமுக செயல்பட்டு வருகிறது. சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது.

தொடர்பு இல்லை

தொண்டர்கள் ரத்தம் சிந்தி, அவர்களின் தியாகத்தில் உருவான கட்சி அதிமுக. எப்போதும் எஃகு கோட்டையாகவே திகழும். எஃகு கோட்டையான அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.

கட்சிக்கும், சசிகலாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்புடையவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஓபிஎஸ்சின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்.

புரட்சி தலைவர் எம்ஜிஆரால் கொண்டு வரப்பட்ட ஐநாவினால் பாராட்டப்பட்ட திட்டம் சத்துணவு திட்டமாகும். இதனை கெடுக்கும் விதமாகவும், சிறுமைப்படுத்தும் விதமாகவும் திமுக செயல்படுகிறது. சத்துணவு திட்டத்தின் மூலம் முறையாக உணவு வழங்காவிட்டால் மக்களை ஒன்றிணைந்து சாலையில் இறங்கி அதிமுக போராடும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:’சசிகலா குறித்த ஓபிஎஸ் கருத்தில் தவறில்லை’ - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

ABOUT THE AUTHOR

...view details