சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்குகள் தொடர்பாக அவரது மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயவர்தன் உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'திமுக அரசு அதிமுகவை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் என் தந்தை மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.
நியாயமே வெல்லும்
அதிமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறும் நரேஷுக்கு தினமும் பிரியாணி கொடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு வைத்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் பேட்டி இப்படி பொய் வழக்குப் போடும் அலுவலர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இவர்களின் நாடகம் நீதிமன்றத்தில் விரைவில் வெளிவரும். காவல்துறை அவர்கள் கடமையை செய்திருந்தால் நரேஷ் சிறைக்கு சென்றிருப்பார். எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. நிச்சயம் நியாயம் வெல்லும்' என்றார். ஜாமீனைத் தடுக்க நாடகம்
தொடர்ந்து பேசிய அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் இன்பதுரை, 'நரேஷ் குமார் கொடுத்தது தான் முதல் வழக்கு; அந்த வழக்கில் ஜாமீன் கிடைத்துவிடும் என்பதால் 307 வழக்கை போட்டனர். நரேஷ்குமார் மருத்துவமனையில் இருந்தால் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைக்காது. இந்த எண்ணத்தினால் தான் சாதாரண காயத்தில் உள்ள நரேஷ் இன்னும் மருத்துவமனையில் உள்ளார்.
நீதிமன்றத்தை நாட உள்ளோம்
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, முதலமைச்சர் உள்ளிட்ட 3 பேருக்கு, இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இதற்குப் பதில் கிடைக்காவிட்டால், நாளை நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம்’ என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய ஜெயவர்தன், 'நாளை (மார்ச் 3) விசாரணைக்கு வரும் வழக்கில் புதிதாக நரேஷ்குமாரின் நிலை எண்ண என்ற மனுவை முன்வைக்க உள்ளோம். அரசு தன்னிடம் உள்ள அனைத்து அலுவலர்களையும் பயன்படுத்தி ஒரு நபரை முடக்க நினைக்கிறது. அலுவலர்கள் இதற்கு துணை போகக் கூடாது. ரஷ்யா - உக்ரைன் போருக்குக்கூட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் காரணம் என கூறினாலும் கூறுவார்கள்' என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயவர்தன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா வருமா மாணவரின் உடல்? - வைரலாகும் நண்பர்கள் அனுப்பிய வீடியோ