தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுக வீழ்ச்சி அடைவது உறுதி - ஜெயக்குமார் - திமுக வீழ்ச்சி அடைவது உறுதி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வீழ்ச்சி அடைவது உறுதி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : Feb 19, 2022, 6:47 PM IST

சென்னை: மந்தைவெளியில் உள்ள ஸ்ரீராஜலட்சுமி மெட்ரிக்குலேசன் உயர் நிலைப்பள்ளியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கினை ஜெயக்குமார் செலுத்தினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், “பொங்கல் பரிசுத்தொகுப்பில் கொள்ளையடித்த 500 கோடி, ஆட்சி தொடங்கியது முதல் கொள்ளையடித்த என 1000 கோடி ரூபாயை திமுக செலவிட்டுள்ளது, அனைத்து இடங்களிலும் திமுக தேர்தல் விதிகளை மீறியுள்ளது.

திமுக என்ன செய்தாலும் அதிமுக வெற்றிபெறுவது உறுதி, அவர்கள் வீழ்வது உறுதி. கோவையில் குண்டர்களை வைத்து திமுக அடாவடி செய்கிறது.

அதிமுக புகார் அளித்த பிறகு சில குண்டர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். கோவையில் குண்டர்கள் யாரும் இல்லை என முதலமைச்சர் கூறுவது முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்றது.

ஒன்பது மாதங்கள் மக்கள் பட்ட துன்பங்கள் இன்று (பிப்ரவரி 19) வாக்குகளாக வெளிப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வாக்களித்த வானதி சீனிவாசன் - கையுறையைத் தவிர்த்ததால் சர்ச்சை

ABOUT THE AUTHOR

...view details