தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் ஊழல் - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டியுள்ளார்.

ex minister
ex minister

By

Published : Dec 21, 2019, 5:25 PM IST

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி ஆட்சி நாள்தோறும் ஊழலில் மூழ்கிவருகிறது. முதலமைச்சரின் துறையான நெடுஞ்சாலைத் துறையில் ஊழல், காவல் துறைக்கு கட்டுப்பாட்டு கருவிகள் வாங்கியதில் ஊழல், குடும்ப நல்வாழ்வுத் துறையில் ஊழல், உள்ளாட்சித் துறையில் ஊழல் என எங்குப் பார்த்தாலும் ஊழல் ஆட்சியாக நடந்துவருகிறது. அதிமுக ஆட்சியின் ஊழல்களைப் பட்டியலிடுவதைவிட, புத்தகமாக வெளியிடலாம்.

தமிழ்நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக, ஆப்டிக்கல் ஃபைபர் பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டருக்கு கடும் போட்டியும் நிலவிவருகிறது.

இந்த டெண்டர்களில் கலந்துகொண்டுள்ள குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்கள் மட்டும், டெண்டர் தங்களுக்கு கிடைக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கின்றன. இதற்கான விதிமுறைகளை பின்பற்றாமலிருக்கும் அந்நிறுவனங்கள், டெண்டர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களை வைத்து அவர்களுக்கு ஏற்றவாறு டெண்டர் விதிமுறைகளில் மாற்றம் செய்யவும் நெருக்கடி கொடுத்துவருகின்றனர். இதற்காக 280 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, இந்த டெண்டர்கள் வெளிப்படையாக நடக்க வேண்டும். மேலும், ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்“ எனத் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஊழல் - தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது மிகவும் தவறான செயல் எனச் சொன்ன அவர், சீர்மிகு பல்கலைக்கழகமாக கொண்டுவருகிறோம் என்ற பெயரில், அண்ணா பல்கலைக்கழகத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும், 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்படுத்தும்விதமாகவும் மத்திய அரசு செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். அதற்கு மாநில அரசு துணைபோவதாகவும் தங்கம் தென்னரசு புகார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஜோக்கர்' பட பாணியில் நாமக்கல்லில் பல லட்ச ரூபாய் முறைகேடு?

ABOUT THE AUTHOR

...view details