சென்னை கலைவாணர் அரங்கத்தில் இரண்டாம் நாள் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் உத்திரமேரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தர் பேசினார்.
'கருணாநிதியின் பிறந்தநாளை செம்மொழித் தமிழ் நாளாக அறிவிக்க வேண்டும்!'
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை செம்மொழித் தமிழ் நாளாக அறிவிக்க வேண்டும் என ஆளுநர் உரை மீதான விவாதத்தில் உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சு. சுந்தர் கோரிக்கைவைத்தார்.
'கருணாநிதியின் பிறந்தநாளை செம்மொழித் தமிழ் நாளாக அறிவிக்க வேண்டும்!'
அப்போது அவர் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். அவை:
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்துவைக்க வேண்டும்,
- கருணாநிதி பிறந்த நாளை செம்மொழித் தமிழ் நாளாக அறிவிக்க வேண்டும்.
இதையும் படிங்க: உதயசூரியனின் உரையைத் திருத்திய ஸ்டாலின்!