சென்னை: அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை அவசரமாக நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து பேரவையில் பேச அனுமதிக்காததால் எதிர்க்கட்சி தலைவர் அவைக்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சம்மந்தமாக கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் கூறும் போது அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்காக அவசரமாக இந்த 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டுவந்து முறையாக நிறைவேற்றவில்லை என தவறான செய்தியை சட்டப்பேரவையில் பதிவு செய்திருக்கிறார்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதி: அதிமுகவை பொறுத்தவரை எல்லா வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு சமமாக கிடைக்க வேண்டும் என்பதே அதிமுக நோக்கம் என தெரிவித்தார். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து பல பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.
அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது திமுக ஆட்சிக்கு வந்தது வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே வழக்கறிஞர் போதிய ஆதாரங்களை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை
மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடவில்லை.
மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு வரவேற்பு: மேலும் சாதிவாரியாக கணக்கெடுத்து ஒரு குழு அமைக்கப்பட்டு அதை 6 மாதத்திற்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என குணசேகரன் தலைமையில் ஆணையம் செய்யப்பட்டது. திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக அரசு மீது பழி சுமத்துகிறது.