தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

துபாயிலிருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்! - தங்கக் கட்டிகள் பறிமுதல்

சென்னை: துபாய், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்புடைய 2.3 கிலோ தங்கம் முதலிய பொருட்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள்

By

Published : Sep 14, 2019, 8:25 PM IST

துபாய், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்புடைய 2.3 கிலோ தங்கம், 24 பழைய லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்கள் ஆகியவற்றை சுங்கத்துறை பறிமுதல் செய்தது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள்

தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகளை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண் பாத்திமா நசரத் (43), ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நஷீர் (28), நவாஸ் கான்(23), சையது அப்துல்(23), கீழக்கரையைச் சேர்ந்த ஜுனைத்(36), மதுரையைச் சேர்ந்த முகமது ஃபரூக் (32) ஆகிய ஆறு பேரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details