ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் கடலூர் மாவட்டம் புவனகிரி பேருந்து நிலையம் அருகே வரும் ஜூலை 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிகோரி, அமமுக கடலூர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு இதுவரை தெரிவிக்காததால் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.