தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஒரு மரம் வெட்டப்பட்டால் 10 மரக்கன்றுகள் நடுவோம்' - அமைச்சர் எ.வ.வேலு - ஒரு மரம் வெட்டப்பட்டால் 10 மரங்கள் நடுவோம்

சாலைப் பணியின்போது ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு பதிலாக 10 மரக்கன்றுகள் நட்டு வருகிறோம் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

By

Published : Apr 13, 2022, 7:00 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.12) பொதுபணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, "சாலைகளை இணைப்பு என்று கருதாமல் பொருளாதார மேம்பாடு வளர்ச்சிக்கு அவசியம் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டில் சாலைகளை அமைத்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் 2001 இல் 52 லட்சம் வாகனங்கள் இருந்தன. 2021-22 இல் 2 கோடியே 95 லட்சம் வாகனங்கள் உள்ளன. 2001 இல் 58 ஆயிரம் கி.மீ. சாலைகள் இருந்தன. 2022 இல் 64 ஆயிரம் கி.மீ. சாலைகள் உள்ளன. வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்த போதும் சாலைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. இதனால் வாகனங்களுக்கு ஏற்ப சாலைகளை அதிகரிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் சாலைப் பணியின்போது ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு பதிலாக 10 மரக்கன்றுகள் நட்டு வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க:நகைச்சுவையுடன் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை விவாதம்!

ABOUT THE AUTHOR

...view details