சென்னை:தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாக பெய்து வரும் தொடர் மழையை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று (நவ.10) நடைபெற்றது.
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை(சுகாதாரம்) அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் கே.என். நேரு, 'சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல அலுவலர்கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 சிறப்பு ஐஏஎஸ் அலுவலர்கள் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாளை(நவம்பர் 11) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை முழுவதும் மின் மோட்டார்கள், டீசல் மோட்டார்கள் என 400 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேவைக்கேற்ப மோட்டார்கள் தயார் நிலையில் வைப்பதற்காக இன்று (நவ.10) இரவே முடுக்கிவிடப்பட்டுள்ளன. மண்டல அலுவலர்களுக்கு, மக்களுக்குத் தேவையான உணவுகளைத் தயார் நிலையில் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வட்டம் வாரியாக தேவையான தற்காலிகப் பணியாளர்களை இன்று இரவே நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான தேவைப்படும் தொகையை உடனே வழங்குவதற்காக மாநகராட்சி ஆணையரிடமும், சிறப்பு ஆட்சியர்களிடமும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ரொட்டி, பால், பழங்கள் போன்ற உணவுகள் தயார் நிலையில் வைப்பது, தாழ்வானப் பகுதிகளிலுள்ள மக்களை முகாம்களில் தங்க வைப்பது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இன்று இரவே மாநகராட்சி அலுவலர்கள் மூலம் அந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர்' எனத் தெரிவித்தார்.
களத்தில் இறங்கிய முதலமைச்சர்