தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் தொடரும் உணவுத்துறை ரைடுகள்... பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!

தாம்பரம் அருகே உள்ள பிரபல உணவகத்தில் 10 கிலோ கெட்டுப்போன இறைச்சியையும், 5 கிலோ கெட்டுப்போன நூடுல்ஸையும் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கைப்பற்றி உள்ளனர்.

By

Published : Jul 15, 2022, 7:53 PM IST

உணவுத்துறை ரைடு பிரபல ஹோட்டளில் கெட்டுப்போன இறைச்சி பரிமுதல்
உணவுத்துறை ரைடு பிரபல ஹோட்டளில் கெட்டுப்போன இறைச்சி பரிமுதல்

சென்னை:சென்னை முழுவதும் கடந்த சில நாட்களாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் உணவகங்களில் தொடர்ந்து திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில், தாம்பரம் அடுத்த கேம்ப்ரோடு பகுதியில் உள்ள குவாலிட்டி உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்துவதாக உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து, தாம்பரம் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது உணவகத்தில் உள்ள இறைச்சி மற்றும் அரிசியை அதிக நாட்கள் குளிர் சாதனப்பெட்டிக்குள் அடைத்து வைத்து பயன்படுத்தியதும், இறைச்சியில் அதிகமான ரசாயனங்களை கலந்து பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

உணவுத்துறை ரைடு: பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

இதையடுத்து உணவகத்திலிருந்து 10 கிலோ கெட்டுப்போன இறைச்சியையும், 5 கிலோ பழைய அரிசி மற்றும் நூடுல்ஸையும் கைப்பற்றி உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் உணவகத்திற்கு 2000 ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர்.

இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பர் கல்வி நிறுவனத்தில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!

ABOUT THE AUTHOR

...view details