தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை ? - முதலமைச்சர் ஆலோசனை

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக உதகையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை- முதலமைச்சர் ஆலோசனை
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை- முதலமைச்சர் ஆலோசனை

By

Published : May 21, 2022, 7:37 PM IST

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் கடந்த மே 21, 1991 நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார், அவரோடு சேர்ந்து 14 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவர் கைது செய்யப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர்.

அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,அவரை கடந்த மே 18 அன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் இதனை வரவேற்று கொண்டாடினர். இந்த வழக்கின் அடிப்படையில் அதனை முன்னுதாரணமாக கொண்டு மற்ற ஆறு பேரும் தங்களை விடுதலை செய்யக் கோர முடியும் என கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களை மே 18 அன்று சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம் வந்த பிறகு, சட்ட வல்லுநர்களோடு கலந்துபேசி, அதற்குப் பிறகு அவர்களையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபடும்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக சட்டத்துறை வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இதில், அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, திமுக எம்.பி. ஆ.ராசா, தலைமை செயலாளர் இறையன்பு, அரசு தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் 6 பேர் விடுதலை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:பேரறிவாளன் விடுதலை அநீதி - குண்டு வெடிப்பில் காயம் அடைந்த போலீஸ் அதிகாரி அனுசுயா கொந்தளிப்பு!

ABOUT THE AUTHOR

...view details