சென்னை: சர்வதேச விமான நிலையத்திலிருந்து மஸ்கட் செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்று(ஜூன் 17) நள்ளிரவு புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை அறிந்த விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக விமானப் பொறியாளர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இதுகுறித்து பயணிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் அலுவலர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுப்பட்டனா். அதன்பின்பு விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.