சென்னை நகரில் கரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி, சுகாதாரத் துறை, காவல் துறை எனப் பலவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன்.
குறிப்பாக, காவல் துறையினர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது, மற்ற பணியாளர்களுடன் சென்று கரோனா பாதித்தவரை அழைத்துவருவது, ஊரடங்கு மீறுபவர்களைக் கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், காவல் துறையினரையும் கரோனா வைரஸ் (தீநுண்மி) விட்டுவைக்கவில்லை. போக்குவரத்து, ஆயுதப்படை, தீயணைப்பு, ரயில்வே, ஊர்க்காவல்படை என அனைத்துநிலை காவலர்களுக்கும் தொற்று பரவியுள்ளது. அதிலும் குறிப்பாக, சென்னையில் இன்று ஒரேநாளில் பெண் ஆய்வாளர் உள்பட ஐந்து காவல் ஆய்வாளர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.