சென்னை:தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
புனேவில் இருந்து வந்த தடுப்பூசிகள்
மேலும், தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்ற ஒன்றிய அரசு, தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. பொதுமக்களும் கரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது புனேவில் இருந்து விமானம் மூலம் 42 பார்சல்களில், 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.