தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

80 கோடி பேருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் - மத்திய அரசு

உணவு தானியங்கள் இலவசம்
உணவு தானியங்கள் இலவசம்

By

Published : Apr 23, 2021, 3:18 PM IST

Updated : Apr 23, 2021, 4:51 PM IST

15:13 April 23

கரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.  கரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஏப்ரல்.23) ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில், மே மற்றும் ஜூன் மாதங்களில் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரூ. 26, 000 கோடி செலவில் உணவு தானியங்கள் வழங்குவதன் மூலம் 80 கோடி பேர் பயன் அடைவார்கள். 

இதையும் படிங்க: கரோனா பரவல்: தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பிரதமருடன் ஆலோசனை!

Last Updated : Apr 23, 2021, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details