சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சுடர்மணி (34). மீனவரான இவர் கடந்த புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று கடற்கரையில் அவரை அடையாளம் தெரியாத நபர்கள் துரத்திச் செல்வதாக அங்குள்ளவர்கள் உறவினர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர்.
உறவினர்கள் காசிமேடு கடற்கரைக்கு வந்து பார்த்தபோது முகத்திலும், வயிற்றுப் பகுதியிலும் பலத்த வெட்டுக் காயங்களுடன் சுடர்மணி இறந்துகிடந்தார். இதனைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.