தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 26, 2021, 12:30 PM IST

ETV Bharat / city

'மீன் உணவுத் திருவிழா' - இன்றுமுதல் தொடக்கம்

சென்னை: சென்னை தீவுத்திடலில் மீன் உணவுத் திருவிழா இன்றுமுதல் (பிப். 26) பிப்ரவரி 28ஆம் தேதிவரை தொடங்கப்படுகிறது. இவ்விழாவினை மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிவைக்கிறார்.

அமைச்சர் டி. ஜெயக்குமார்
அமைச்சர் டி. ஜெயக்குமார்

கடல் உணவுகள் எல்லாமே ஆரோக்கியமானவைதான். அதிலும் முதன்மையான மீன் உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமானவை.

சென்னை 'மீன் உணவுத் திருவிழா'

சென்னை தீவுத்திடலில் இரண்டாவது ஆண்டாக தமிழ்நாடு அரசின் மீன்வளத் துறையின் சார்பில் மீன் உணவுத் திருவிழா தொடங்கவுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமைவரை (பிப். 28) இந்த மீன் உணவுத்திருவிழா நடைபெறவுள்ளது.

மீன் உணவின் அவசியம் குறித்தும், மீன் உணவுகளைச் சமைப்பது குறித்தும் பிரபல சமையல் கலைஞரின் உரையும் இங்கு இடம் பெறுகிறது.

அமைச்சர் ஜெயக்குமார் வருகை

சமையல் கலை படிக்கும் மாணவர்கள், மீனவ குப்பங்களின் மகளிர் பங்கேற்கும் மீன் உணவு சமையல் போட்டியும் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் இந்த உணவுத் திருவிழாவைத் தொடங்கிவைக்கிறார்.

மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் கே. கோபால் தலைமை வகிக்கிறார். மீன்வளத் துறை ஆணையர் ஜெ. ஜெயகாந்தன் அனைவரையும் வரவேற்கிறார்.

இதையும் படிங்க:மக்களை கவர்ந்த கடல் உணவுத் திருவிழா!

ABOUT THE AUTHOR

...view details