தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 3, 2022, 4:59 PM IST

ETV Bharat / city

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான 'முதல் பருவத்தேர்வு' நாளை தொடக்கம்!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வு நாளை தொடங்கவுள்ளது. இந்த தேர்வு மாவட்ட அளவிலான பொதுத்தேர்வாக நடத்தப்பட உள்ளது.

mid-term
mid-term

சென்னை:தமிழ்நாட்டில் நடப்புக்கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான காலாண்டுத்தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக முதல் பருவத்தேர்வுகள் நாளை (ஆகஸ்ட் 4) தொடங்கவுள்ளன.

நாளை முதல் வரும் 12ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. பொதுத்தேர்வை சந்திக்கக்கூடிய 10 ,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த இரு மாதங்களில் நடத்தப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையில் இந்தத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

மாவட்ட அளவிலும் பொதுவான கேள்வித்தாள் அடிப்படையிலும் இந்த மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. அதேபோல் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பருவத்தேர்வு, ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளதாக கல்வித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:'விவசாயத்தை அழித்து விமானநிலையம் அமைப்பதா? பிறந்த மண்ணை விட்டுக்கொடுக்கமாட்டோம்'

ABOUT THE AUTHOR

...view details