தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா தொற்று பாதிப்பால் 3 மாதத்திற்கு பின்னர் முதல் இறப்பு! - கரோனா தொற்று பாதிப்பால் 3 மாதத்திற்கு பின்னர் முதல

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் மார்ச் 14ஆம் தேதிக்குப் பிறகு சுமார் மூன்று மாதங்கள் கடந்து மீண்டும் முதல் முறையாக ஒருவர் இறந்துள்ளார். மேலும் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,632 என உயர்ந்துள்ளது.

கரோனா தொற்று முதல் இறப்பு
கரோனா தொற்று முதல் இறப்பு

By

Published : Jun 15, 2022, 8:50 PM IST

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 476 நபர்களுக்கு பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.

பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஜூன் 15 ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 14,212 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் ஐரோப்பிய நாட்டில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், மலேசியா மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த தலா ஒரு நபர்களுக்கும், உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் தமிழ்நாட்டில் இருந்த 471 நபர்கள் என 476 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை 6 கோடியே 56 லட்சத்து 45 ஆயிரத்து 639 நபர்களுக்கு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 58 ஆயிரத்து 445 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 1,938 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் 169 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 18 ஆயிரத்து 481 என உயர்ந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலையில் மார்ச் 14 ஆம் தேதி இறப்பு இல்லாத நாளாக பதிவாகியது. அப்போது முதல் நிலை இரண்டாம் நிலை மூன்றாம் நிலை ஆகிய மூன்று அலையிலும் சேர்த்து 35 ஆயிரத்து 25 நபர்கள் இறந்ததாக பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஜூன் 15 ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 வயது பெண் ஜூன் 14 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 221 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 95 நபர்களுக்கும் ,கோயம்புத்தூரில் 26 நபர்களுக்கும், நீலகிரி மாவட்டத்தில் 23 நபர்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 நபர்களுக்கும், கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் தலா 20 நபர்களுக்கும், சேலம் மாவட்டத்தில் 6 நபர்களுக்கும், திருச்சி மற்றும் வேலூர் மாவட்டத்தில் 5 நபர்களுக்கும், திருநெல்வேலி, கடலூர், மதுரை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 4 நபர்களுக்கும், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா மூன்று நபர்கள் என 23 மாவட்டங்களில் நோய் தொற்று பரவ தொடங்கியுள்ளது.

பரிசோதனை எண்ணிக்கை, நோய் பரவல் வீதம் 3 சதவீதமாக மாநில அளவில் பதிவாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் 2,024 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 171 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு பரவல் விகிதம் 8.4 என அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 722 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 66 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு பரவல் விகிதம் 9.1 என பதிவாகியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது அலையில் குறைந்திருந்த நோய் தொற்று பரவல் தற்போது அதிகரித்து வருவது நான்காவது அலையை உருவாக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:'இவர் மோடி இல்ல; மோடி மாதிரி' நகல் மோடியை கண்டு வியந்த மக்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details