தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி - 75th Independence

75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி
75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி

By

Published : Aug 6, 2022, 3:41 PM IST

சென்னை: 75-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார்.

இதற்காக இன்று நடைபெற்ற முதலாவது நாள் சுதந்திர தின நிகழ்ச்சியில், முதலமைச்சரை காவல்துறை வாகன அணிவகுப்புடன் அவரது இல்லத்திலிருந்து அழைத்து வருவது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப்பிரிவினர் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றுவது போன்று ஒத்திகை நடைபெற்றது.

75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி

பின்னர், தகைசார் தமிழர் விருது, ஏபிஜே அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகள் வழங்குவது போன்று ஒத்திகை நடைபெற்றது.

இதையும் படிங்க:’மகளிர் இலவச பேருந்து’- பெண்கள் எளிதில் அடையாளம் காண பிங்க் நிற பேருந்துகள் இயக்கம்

ABOUT THE AUTHOR

...view details