இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் இறந்துள்ளனர் என்ற தகவலும், 36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற தகவலையும் அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
பட்டாசு ஆலை விபத்து! - ஆளுநர் இரங்கல்! - ஆளுநர் இரங்கல்
சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
purohit
வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தமிழக மக்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்தனை செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!