சென்னை: விருதுநகரில் கடந்த மாதம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கென நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இது குறித்து வெளியிப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம், தொழிலாளர் நலத்துறை அமைச்சரைத் தலைவராக கொண்டு, செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஆகியோரை அரசு பிரதிநிதிகளாகவும், அலுவல்சாரா உறுப்பினர்களாக, வேலையளிப்போர் பிரதிநிதிகளாக பட்டாசு தொழிற்சாலை சார்பான பிரதிநிதி, தீப்பெட்டி தொழிற்சாலை சார்பான பிரதிநிதி, தொழிற் கூட்டமைப்பின் பிரதிநிதி ஆகியோரும், தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக பட்டாசு தொழிற்சாலை தொழிற்சங்கத்தின் பிரதிநிதி, தீப்பெட்டி தொழிற்சாலை தொழிற்சங்கத்தின் பிரதிநிதி மற்றும் பிற தொழிற்சங்க பிரதிநிதி ஆகியோர் அடங்கிய வாரியம் அமைப்பதற்கு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.