தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தீபாவளி பண்டிகை: 'பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' - பள்ளிக் கல்வித் துறை

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு பட்டாசுகள் வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.

firecrackers exploding awareness
firecrackers exploding awareness

By

Published : Nov 12, 2020, 3:15 PM IST

இது குறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மக்களின் கவனக்குறைவு காரணமாக பட்டாசு வெடிப்பதால் தீ விபத்து ஏற்படாலம். உயிர்சேதம், பொருள்சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு தீக்காயங்களும், சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படக்கூடும். இது போன்ற நிகழ்வுகளை தவிர்ப்பதும், தடுப்பதும் நமது முக்கிய கடமையாகும்.

எனவே, பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நடப்பாண்டில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதனை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத் தலைவர்கள், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை பரிசோதிப்பதை தவிர்த்தல், விவரம் தெரியாத சிறுவர்களை வெடிகளை கொளுத்த அனுமதிக்காமல் இருந்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவை அனைத்தும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக மாணவர்களிடையே கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது பள்ளிகள் திறக்கப்படாமலிருக்கும் நிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு எவ்வாறு ஏற்பாடு செய்வது என ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:தீபாவளி பண்டிகை: முக்கிய கடைவீதிகளில் குவிந்த மக்கள்

ABOUT THE AUTHOR

...view details