தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பணிகளில் துரிதம் - தீயணைப்பு வீரர்களுக்கு சைலேந்திர பாபு பாராட்டு - தீயணைப்புத்துறை

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீயணைப்புத்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருவதாக தீயணைப்புத்துறை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

babu
babu

By

Published : Sep 9, 2020, 8:51 PM IST

புதுப்பேட்டையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலகத்தில், தீயணைப்பு வீரர்களுக்கு மனநல பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சியை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை இயக்குநர் சைலேந்திர பாபு தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சைலேந்திர பாபு, " மாநிலம் முழுவதும் ஆண்டுக்கு 25 ஆயிரம் தீயணைப்பு புகார்களும், 26 ஆயிரம் மீட்புப்பணி குறித்த புகார்களும் வருகின்றன.

பருவமழை தொடங்க உள்ளதால் நிலச்சரிவு, கட்டட விபத்து, வெள்ள மீட்பு தொடர்பான புகார்கள் தீயணைப்பு துறையினருக்கு அதிகமாக வரும். எனவே வீரர்கள் மன சோர்வின்றி பணிபுரிய வேண்டும்.

கரோனா பணிகளில் சிறப்பு - தீயணைப்புத்துறையினருக்கு சைலேந்திர பாபு பாராட்டு

கரோனா காலக்கட்டத்தில் கட்டங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மேலும், இப்பணிகளின் போது கரோனா பாதித்த 170 தீயணைப்பு வீரர்களில் 160 பேர் குணமடைந்துள்ளனர் “ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: குமரியில் சிறுமி கடத்தல்: பூ வியாபாரி கைது!

ABOUT THE AUTHOR

...view details