இன்று அதிகாலை நான்கு மணிக்கு சென்னை மண்ணடியில் உள்ள ஐந்து தளங்களைக் கொண்ட பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயங்கர தீ ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட புகை மண்டலத்தால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவலளித்தனர்.
இதன்பேரில், சம்பவ இடத்திற்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து மூன்று மணி நேர கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.