தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வீட்டின் கூரை மேல் ஏறிய 6 அடி நீள சாரைப் பாம்பு

மயிலாடுதுறையில் வீட்டின் கூரை மேல் ஏறிய 6 அடி நீள சாரைப் பாம்பை தீயணைப்பு துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 12, 2022, 7:44 AM IST

நாகப்பட்டினம்:மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் உள்ள பொட்டவெளி தெருவில் வசித்து வரும் வரதராஜன் என்பவரின் வீட்டின் கூரையில் நேற்று 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஏறியது. இதனை பார்த்த அப்பகுதியினர் வரதராஜனிடம் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து கூரை மீது ஏறிய பாம்பினை பிடிக்க வரதராஜன் மயிலாடுதுறை தீயணைப்பு துறை உதவியை நாடினார். உடனே, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி சாரைப் பாம்பை பிடித்தனர்.

வீட்டின் கூரை மேல் ஏறிய 6 அடி நீள சாரைப் பாம்பினை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறை வீரர்கள்

பின்பு அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் நிம்மதியடைந்த அப்பகுதி மக்கள் பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: '10 நாளுக்கு முன்னாடி தான் எங்களைப் பார்த்துட்டு போனான்...' வீரமரணம் அடைந்த லட்சுமணனின் தாய் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details