சென்னை:தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தில் மேடவாக்கத்தை சேர்ந்த மன்பிரித் சிங் என்பவர் கைத்தெறி (Handloom) பொருள்கள் விற்பனை செய்யும் ஷோரூமினை நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். நேற்றிரவு (மே.12) அவரது ஷோரூமில் திடீரென கைத்தெறி பொருள்கள் தீ பிடித்து எரியத் தொடங்கின.
இதனை கண்ட ஷோரூம் ஊழியர்கள் அலரி அடித்து கொண்டு வெளியேறினர். சிறிது நேரத்தில் மலமலவென தீப்பற்றியதால் மேல் தளங்களில் உள்ள பொருள்களும் எரியத் தொடங்கின. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் மற்றும் மேடவாக்கம் பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.