பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் வளாகத்தில், தொடக்கக் கல்வித் துறை அலுவலகம் தனியாக இயங்கிவருகிறது. இந்த அலுவலகம் தரைத்தளம், இரண்டு மாடிகளுடன் செயல்படுகிறது.
தொடக்கக் கல்வித் துறை அலுவலகத்தில் தீ விபத்து இந்த அலுவலகத்திற்கு முதல் தளத்தில், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் உள்ளது. அலுவலகத்தின் அருகிலுள்ள கணினி அறையில் முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன.
தீ விபத்து
இந்நிலையில், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 28) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தால் கணினி அறையிலிருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. மேலும் 30-க்கும் மேற்பட்ட கணினிகள் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து தடயவியல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்துவருகின்றனர்.
பணிக்கு வர வேண்டாம்
இந்நிலையில், தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள் யாரும் இரண்டு நாள்கள் பணிக்கு வர வேண்டாம் எனத் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'செங்கோட்டையனால் கல்வித்துறை காவித்துறையாக மாறியுள்ளது: மு.க.ஸ்டாலின் விமர்சனம்'