சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி கட்டடத்தின் நான்காவது தளத்தில் மின்கசிவு காரணமாக இன்று காலை 5.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ் கண்ணா தலைமையில் தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய இடங்களிலிருந்து ஏழு தீயணைப்பு வாகனங்களில் வந்திருந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எல்.ஐ.சி. கட்டடத்தில் தீடீர் தீ விபத்து அருகில் இருக்கும் குடியிருப்புகள், கடைகளுக்கு தீ பரவாத வண்ணம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில், எல்.ஐ.சி.யின் ஐந்தாவது தளத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டன. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:மும்பையில் தீ விபத்து: ரூ.3 கோடி மதிப்பிலான மின்பொருள்கள் எரிந்து சாம்பல்!