தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாரிமுனை அருகே வணிக வளாகத்தில் தீ விபத்து: பழைய பொருள்கள் எரிந்து நாசம் - தீயணைப்பு துறை தீயை அணைத்தனர்

சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்தின் நான்காவது மாடியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பழைய பொருள்கள் எரிந்து நாசமாகின.

பாரிமுனை அருகே வணிக வளாகத்தில் தீவிபத்து
பாரிமுனை அருகே வணிக வளாகத்தில் தீவிபத்து

By

Published : Dec 11, 2021, 10:38 AM IST

சென்னை: பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் ஹீரா பானா என்ற பெயரில் வணிக வளாகம் ஒன்றுள்ளது. இந்த வணிக வளாகத்தின் நான்காவது மாடியிலுள்ள அறையில் நேற்று (டிசம்பர் 10) இரவு 7.15 மணியளவில், திடீரென தீ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனே வணிக வளாகத்தின்கீழ் தளத்தில் கடைகளில் இருந்த நபர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தீயணைப்பு துறை வருகை

பாரிமுனை அருகே வணிக வளாகத்தில் தீ விபத்து

மேலும், தீயானது கொளுந்துவிட்டு எரிந்ததால் வால்டாக்ஸ் சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் வேடிக்கைப் பார்த்தனர். பின்னர் இது குறித்து வண்ணாரப்பேட்டை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏழு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 40 நிமிட போராட்டத்திற்குப் பின்பு தீயானது அணைக்கப்பட்டது. ஆனால், அதற்குள் அறை முழுவதும் தீயானது பரவி பழைய பொருள்கள் நாசமாகின.

விபத்து பற்றி காவல் துறை விசாரணை

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தத் தீவிபத்து குறித்து யானைகவுனி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்தது. மேலும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: காவல் சரகங்களையும் அமைக்க சிறப்பு அலுவலர்கள் மூலம் திட்டம்

ABOUT THE AUTHOR

...view details