தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் அடுத்தடுத்து "தீ"விபத்து - குப்பையில் பற்றி எரிந்த தீ

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்து கிளம்பிய கரும்புகையால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

சென்னையில் அடுத்தடுத்து "தீ"விபத்து
அடுத்து அடுத்து சென்னையில் "தீ"விபத்து

By

Published : Apr 28, 2022, 7:14 AM IST

Updated : Apr 28, 2022, 2:02 PM IST

சென்னை: பெருங்குடியில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கொட்டும் கிடங்கில் நேற்று(ஏப் 27) திடீரென தீ பிடித்தது. குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் உரம் கொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் தீ பற்றியதால் அப்பகுதி முழுவதும் தீ பரவியது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அப்பகுதியில் வசிப்பர்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

தகவல் அறிந்த துரைப்பாக்கம் தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இதையும் படிங்க:சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

Last Updated : Apr 28, 2022, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details