தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் - chennai airport

சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று விமான நிலைய நிா்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணியாதவா்களுக்கு அபராதம்
சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணியாதவா்களுக்கு அபராதம்

By

Published : Aug 30, 2022, 11:55 AM IST

சென்னை: கரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக நீங்கவில்லை. ஆகவே சென்னை விமான நிலையத்திற்கு வரும் அனைவரும் கரோனா விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து, அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலைய ட்விட்டா் பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் விமான பயணிகள், வழியனுப்ப வருபவர்கள், விமான நிலைய ஊழியா்கள் என அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு, சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதி இல்லை. அதேபோல் அனைவரும் முழு பயண நேரத்திலும் முகக் கவசத்தை முறையாக வாய் மூக்கு மூடியிருக்கும் விதத்தில் அணிந்திருக்க வேண்டும்.

சில பயணிகளுக்கு மாஸ்க் அணிவதால் சுவாச கோளாறுகள் ஏற்படலாம். அப்படிப்பட்ட பயணிகள் முறையான அனுமதிபெற்று மாஸ்க் அணிவதில் விலக்கு பெற்றுக் கொள்ளலாம். மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் மற்றும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா வைரஸ் முழுமையாக நீங்கி விட்டது என்று மத்திய அரசின் சுகாதாரத்துறை அறிவிக்கும் வரையில் சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி போன்ற கரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறுமி டானியாவை சந்தித்து முதலமைச்சர் நலம் விசாரிப்பு

ABOUT THE AUTHOR

...view details