சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் தமிழ்நாடு அரசால் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல், உபயோகித்தல் ஆகியவற்றிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருள்களான உணவுப்பொருள்களை கட்ட பயன்படுத்தும் நெகிழித் தாள் அல்லது உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் நெகிழித் தாள், தெர்மாக்கோல் தட்டுகள் போன்ற 14 வகையான நெகிழிப் பொருள்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.
அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருள்களை மாநகராட்சி பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறது.